

மக்களுக்காக நான் என கூறும் ஜெயலலிதா, அவரது கோடநாடு எஸ்டேட்டை மக்களுக்காக எழுதிக் கொடுப்பாரா என குன்னூரில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணி வேட்பாளர்களை ஆதரித்து குன்னூரில் நேற்று நடந்த கூட்டத்தில் விஜயகாந்த் பேசிய தாவது:
நீலகிரி மாவட்டத்தில் போக்கு வரத்து மற்றும் தேயிலைக்கு ஆதார விலை தலையாய பிரச்சினை. இதற்கு இதுவரை ஆண்ட கட்சிகள் தீர்வு காணவில்லை. இங்குள்ள மலையாளிகளுக்கு ஜாதிச் சான் றிதழ் கிடைக்கவில்லை. உதகை, குன்னூர் நகரங்களில் எவ்வித மாற் றமும் இல்லை. மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்த வேண்டும்.
எங்கள் கூட்டணியில் 6 தலைவர் கள் உள்ளோம். யாராவது தவறு செய்தால் மற்ற 5 பேர் தட்டிக் கேட்பார்கள். பணம் கொடுப்பவர் களுக்கு ஏன் வாக்களிக்க வேண் டும்? எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள்.
ஜெயலலிதாவும், கருணாநிதியும் கடந்த 25 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிவிட்டனர். மதுவிலக்கு குறித்து 6 மாதங்களாகப் போராட் டம் நடத்தப்பட்டபோது கண்டுகொள் ளாத ஜெயலலிதா, தற்போது படிப்படியாக அமல்படுத்தப்படும் என்கிறார்.
அனைவருக்கும் கல்வி கிடைக் கும் வகையில் பள்ளி நேரத்தை மாற்றி, அந்த பள்ளிகளை மாலை நேர கல்லூரிகளாக மாற்றலாம். இதனால், பள்ளிகளின் தரம் உயர்ந்து, வசதிகளும் கிடைக்கும்.
கருணாநிதி தற்போது நல்லாட்சி மலர திமுகவுக்கு வாக்களிக்க கூறுகிறார். அவர் 5 முறை ஆட்சி அமைத்தபோது ஏன் நல்லாட்சி கொடுக்கவில்லையா?. ஜெயலலிதா, மக்களுக்காக நான் என கூறுகிறார். அவரது கோடநாடு எஸ்டேட்டை மக்களுக்கு எழுதிக் கொடுப்பாரா? இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.