Published : 02 Apr 2016 08:20 AM
Last Updated : 02 Apr 2016 08:20 AM

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனை: ஏப்.10-ல் மாமண்டூரில் தேர்தல் சிறப்பு மாநாடு - வேட்பாளர்கள் அறிமுகமும் நடக்கிறது

தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி சார்பில் தேர்தல் சிறப்பு மாநாடு சென்னையை அடுத்த மாமண்டூரில் வரும் ஏப்ரல் 10-ம் தேதி நடக்க வுள்ளது. இதில் முதல்கட்ட வேட் பாளர்கள் பட்டியல் வெளியிடப் படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

மக்கள் நலக்கூட்டணி மற்றும் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேற்று சந்தித்துப் பேசினர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன், அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த தெய்வசிகாமணி உள்ளிட்ட வர்கள் நேற்று மதியம் 12 மணி யளவில் தேமுதிக அலுவலகத் துக்கு சென்றனர்.

வங்கி கடனுக்கு ஜப்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பினர் வரும் 5-ம் தேதி நடத்தவுள்ள ரயில் மறியல் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு விஜயகாந்தை சந்தித்து பேசினர். இதையடுத்து, மக்கள் நலக்கூட்டணியில் உள்ள 4 கட்சித் தலைவர்களும், விஜயகாந்தும் சுமார் 1.45 மணி நேரம் தனியாக பேசினர்.

இந்த பேச்சுவார்த்தை மதியம் 2 மணியளவில் நிறைவடைந்தது.

இதையடுத்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர். அப்போது, வைகோ கூறியதாவது:

தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி யின் தேர்தல் சிறப்பு மாநாடு சென்னையை அடுத்த மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியி யல் கல்லூரி வளாகத்தில் வரும் 10-ம் தேதி நடக்கவுள்ளது. இந்த மாநாட்டுக்கு நான் தலைமை வகிக்க வுள்ளேன். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அந்தக் கூட்டத்தில் சிறப்புரையாற்றுவார். விஜய காந்தை நாங்கள் அக்கூட்டத்தில் முதல்வர் வேட்பாளராக அறிவிப்போம். எங்கள் கூட்டணியின் முதல் வேட்பாளர் பட்டியல் அப்போது அறிவிக்கப்பட்டு, வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாமண்டூரில் மாநாடு ஏன்?

தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி மாநாட்டை திருச்சியில் நடத்துவது என்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவ்வளவு தூரம் செல்ல வேண்டாம், சென்னைக்கு அருகில் நடத்தலாம் என்று ம.ந.கூட்டணியினரிடம் விஜய காந்த் கேட்டுக்கொண்டதன் அடிப் படையிலேயே மாமண்டூரில் மாநாடு நடத்தப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிக அலுவலக வளாகத்துக் குள் நேற்றைய தினம் நிருபர்களை அனுமதிக்கவில்லை. இதனால், பத்திரிகையாளர்கள் ஜவஹர்லால் நேரு சாலையோரம் காத்திருந்து செய்தி சேகரித்தனர்.

பின்னர் பேட்டி அளிப்பதற்காக ம.ந.கூட்டணி தலைவர்கள் உள்ளே அழைத்தபோது, நிருபர்கள் யாரும் உள்ளே செல்லவில்லை. எனவே, நிருபர்கள் நின்றிருந்த இடத்துக்கே வந்து தலைவர்கள் பேட்டியளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x