Published : 14 Apr 2016 09:51 AM
Last Updated : 14 Apr 2016 09:51 AM

திமுகவில் 19 பெண்கள் போட்டி

திமுகவில் 19 பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 தேர்தலில் திமுக 119 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 11 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். ஆனால், இப்போது 173 தொகுதிகளில் போட்டியிடும் திமுக, 19 பெண்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது.

பொன்னேரி (தனி) - டாக்டர் கே.பரிமளம், ஆர்.கே.நகர் - சிம்லா முத்துசோழன், தியாகராய நகர் டாக்டர் கனிமொழி, செங்கல்பட்டு - வரலட்சுமி மதுசூதனன், அரக்கோணம் (தனி) - எஸ்.பவானி, கே.வி.குப்பம் (தனி) - வி.அமலு, ஜோலார்பேட்டை - சி.கவிதா தண்டபாணி, ஊத்தங்கரை (தனி) - எஸ்.மாலதி நாராயணசாமி, கோவை வடக்கு - மீனா லோகு, தஞ்சாவூர் - டாக்டர் அஞ்சுகம் பூபதி, தூத்துக்குடி - கீதா ஜீவன், ஆலங்குளம் - பூங்கோதை ஆலடி அருணா உட்பட 19 பெண்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x