Published : 19 Apr 2016 08:02 AM
Last Updated : 19 Apr 2016 08:02 AM

பிரகாஷ் ஜவடேகரின் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஜெயலலிதாவின் பதில் என்ன? - கருணாநிதி கேள்வி

அதிமுக ஆட்சியில் எங்கும் வெளிப்படையாக ஊழல் நிறைந்திருக்கிறது என்ற மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் கடுமையான குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதாவின் பதில் என்ன என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கேள்வி - பதில் வடிவில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை விற்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை உணர்ந்துதான் திமுக தேர்தல் அறிக்கையில் நெல் லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை யாக குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரத்து 500 வரை வழங்கப்படும் என அறி வித்துள்ளோம். விவசாயிகளைப் பற்றி கவலைப்படாத அரசாக அதிமுக அரசு உள்ளது. விவசாயி களைப் பற்றி ஊடகங்களும் செய்தி வெளியிடுவதில்லை.

தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘‘தமிழகத்தில் வழங்கப்படும் இலவச அரிசிக்கு தமிழக அரசு கிலோவுக்கு ரூ.3 மட்டுமே வழங்குகிறது. ஆனால், அரிசியை தாங்களே இலவசமாக வழங்கு வதுபோல அதிமுக அரசு விளம்பரம் செய்துகொள்கிறது. தமிழகத்தில் ரேஷன் அட்டை பெறுவது முதல் மின் இணைப்பு பெறுவது வரை எங்கும் வெளிப் படையாக ஊழல் நிறைந்திருக் கிறது. இதனால் மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட்டுள் ளது’’ என கடுமையான குற்றச் சாட்டை முன்வைத்துள்ளார். இதற்கு அடுத்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பதில் சொல்வார் என எதிர்பார்க்கிறேன்.

அதிமுக பிரச்சாரக் கூட்டங்களில் ஜெயலலிதா மட்டும் மேடையின் மேலே அமர்ந்திருக்க, வேட்பாளர்கள் மேடையின் கீழே அமர வைக்கப்பட்டுள்ளனர். இதனை விமர்சித்து ‘தி இந்து’ (தமிழ்) நாளிதழில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. “தமிழகம் தவிர வேறெங்கும் மக்களாட்சி நடக்கும் ஓரிடத்தில் ஒரு மாநிலத்தின் முதல்வரோ, கட்சியின் தலைவரோ உட்கார முடியுமா என்பதை கற்பனையிலும் நினைக்க முடியவில்லை” என அந்தக் கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதனை படிக்க வேண்டியவர்கள் படித்து அதன்படி நடந்துகொள்ள முயற் சிக்க வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x