திண்டிவனத்தில் சிப்காட் அடிக்கல் நாட்டு விழா முதல்வர் ஸ்டாலின் ஏப்.5-ல் அடிக்கல் நாட்டுகிறார்: அமைச்சர் மஸ்தான் தகவல்

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் அமைச்சர் மஸ்தான் பேசுகிறார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் அமைச்சர் மஸ்தான் பேசுகிறார்.
Updated on
1 min read

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்திற்கு ஏப்ரல் 4-ம் தேதி வரும் முதல்வருக்கு, பேனர்கள் வைக்க வேண்டாம். சுவர் விளம்பரம் எழுத வேண்டும் என திமுகவினருக்கு அமைச்சர் மஸ்தான் வேண்டுகோள் விடுத் துள்ளார்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் திண் டிவனத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தீர் மான குழு துணை தலைவர் டாக்டர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலா ளரும், சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டு பேசியது:

விழுப்புரம் மாவட்டத்தில் வரும்5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திண்டிவனத்தில் சிப்காட் அடிக்கல் நாட்டு விழாமற்றும் 10 ஆயிரம் பேருக்குவேலைவாய்ப்பும் ஏற்படுத்தக் கூடிய பணிகள் தொடக்க விழாக்க ளில் கலந்து கொள்கிறார். இதனைமுன்னிட்டு வரும் 4-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, திண்டிவனத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்க அனைவரும் திரண்டு வர வேண்டும்.

முதல்வர் வரும் வழியில் பேனர்வைக்கக் கூடாது. அனைத்து பகுதிகளிலும் சுவர் விளம்பரம் எழுத வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் சேதுநாதன், சீத்தாபதி சொக்கலிங்கம், செந்தமிழ் செல்வன், மாநில தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன், செஞ்சி பேரூராட்சிமன்றத் தலைவர் மொக்தியார் மஸ்தான், ஒன்றிய பெருந்தலைவர்கள் யோகேஸ்வரி மணிமாறன், விஜயகுமார், அமுதாரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், நெடுஞ் செழியன், சுப்பிரமணியன், விஜய ராகவன், அண்ணாதுரை, துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in