Published : 02 Apr 2022 06:13 AM
Last Updated : 02 Apr 2022 06:13 AM

நிலம் கையகப்படுத்த தனி நபர் சம்மதித்தும் அரசு மெத்தனம்: சாலை வசதி கேட்டு அரசுப் பள்ளி மாணவர்கள் மறியல்

ஆண்டியார்பாளையத்தில் பள்ளிக்கு சாலை வசதி கேட்டு மறியல் செய்த மாணவர்கள்.

புதுச்சேரி: புதுச்சேரி அருகே ஆண்டியார் பாளையத்தில் அரசுப் பள்ளிக்கு சாலை வசதி கேட்டு மாணவ, மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி தவளக்குப்பம் அருகேஆண்டியார்பாளையம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஆண்டி யார்பாளையம், கொருக்கமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளிக்குச் செல்ல உரிய சாலை வசதி இல்லை. பள்ளிக்கு சாலை வசதி கேட்டு கிராம மக்களும், பெற்றோரும் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக் கப்படவில்லை. மாணவர்களின் நலன் கருதி தனிநபர் ஒருவர் தனதுசொந்த நிலத்தில் பல ஆண்டுக ளாக வழி கொடுத்து வந்தார். இதனை அரசுக்கு தருவதாக தெரி வித்தும், அரசு அந்த இடத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக் கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் நேற்று காலை மாணவர்கள் வழக்கமாக பள்ளிக்கு சென்ற நிலையில் குறிப்பிட்ட வழியை மாணவர்கள் பயன்படுத்த முடியாதபடி, இடத்துக்கு சொந்தக் காரரான அந்த தனிநபர் வேலி போட்டு தடுத்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த பள்ளி மாணவ,மாணவிகள் தங்களது பெற்றோரு டன் பள்ளி வாயில் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த தவளக்குப்பம் போலீஸார் மற்றும்பள்ளி தலைமையாசிரியர் மாணவர்களிடமும், வழியை அடைத்த தனிநபரிடமும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், தனிநபரின் நிலத்தை அரசு கையகப்படுத்த உரிய நடவ டிக்கை எடுக்க வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அந்த தனிநபர் வழிவிட்டார். இதை யடுத்து மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x