ஒரு சொட்டு தண்ணீர் இன்றி வறண்ட வைகை ஆறு: கோடை வெயிலின் தாக்கத்தால் உக்கிரமாகும் மதுரை

ஒரு சொட்டு தண்ணீர் இன்றி வறண்ட வைகை ஆறு: கோடை வெயிலின் தாக்கத்தால் உக்கிரமாகும் மதுரை
Updated on
1 min read

மதுரை: மதுரை வைகை அணையில் நீர்மட்டம் 68 அடியாக (கொள் ளளவு 71 அடி) இருந்தும், ஆற்றில் தண்ணீர் திறந்துவிடாத நிலையில், வைகை ஆறு வறண்டு கோடையின் உக்கிரம் மதுரை மக்களை வாட்டி வதைக்கிறது.

தற்போது வைகை ஆறு வறட் சிக்கு இலக்காகி உள்ளது. அணை நிரம்பும்போதும், சித்திரைத் திரு விழா நாட்களில் மட்டும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

அந்த நீரும் சிறிது நாட்கள் மட் டுமே ஓடுவதால், மதுரை மாநகரின் நீர் ஆதாரத்துக்கு உதவுவதில்லை. மதுரையில் தற்போது 100 டிகிரி வெயில் கொளுத்துவதால் மக்கள் திண்டாடி வருகின்றனர். மதுரை யில் கோடையின் உக்கிரம் அதிகரிப் பதற்கு வைகை ஆறு வறண்டு கிடப்பதே காரணம் என நீர்நிலை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து வேளாண் பொறி யாளரும், நீர்நிலை ஆர்வலருமான பிரிட்டோராஜ் கூறியதாவது:

தமிழகத்தின் மழையளவு 923 மி.மீ. தேனி மாவட்டத்தில் வைகை ஆறால் இயல்பைவிட அதிக மழைப் பொழிவு உள்ளது.

ஆனால், வைகை ஆறு மது ரையைத் தொடும் போது அதன் இயல்பு மாறி விடுகிறது.

சின்னமனூர் முதல் மதுரை வரை வைகை ஆற்றின் தெற்குப் பகுதி வறண்டு உள்ளது. ஆற்றின் படுகை குறைந்த மண்ணைக் கொண்டி ருப்பதால், அதன் தனித்தன்மை குறைந்து வருகிறது.

மணல் அள்ளப்பட்டு விட்டதால் நீரோட்டத்துக்கு பாதிப்பு ஏற்படு கிறது.

ஆண்டு முழுவதும் நீரோட்டம் இன்றி வைகை ஆற்றின் பக்க வாட்டு நிலப்பகுதியில் வறட்சி அதிகரிக்கிறது. மழையும் சரியாக பெய்யாததால் மண்ணை மீண்டும் செறிவூட்ட வழியின்றி போகிறது. செறிவூட்டினால் மட் டுமே அடுத்து பெய்யும் மழையால் ஆற்றில் தண்ணீர் பெருகியோடும். அப்படியில்லாத பட்சத்தில் பெய் யக்கூடிய மழையோ, ஆற்றில் திறந்துவிடக்கூடிய தண்ணீரோ வைகை ஆற்றின் மண்ணை ஈரப்படுத்தவே போதுமானதாக இருக்கும். அதனாலேயே, வைகை ஆற்றில் தண்ணீர் ஓடுவதில்லை.

ஆற்றில் நீரோட்டம் இல்லா விட்டால், அந்த ஆறு ஓடும் நிலப் பரப்பின் தட்பவெப்பநிலையே மாறும். அதனாலே, தற்போது நிரந்தர வறட்சிக்கு இலக்கான வைகையால், மதுரையில் வழக்கத்துக்கு மாறாக கோடை வெயில் உக்கிரமாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in