Published : 18 Apr 2016 07:37 AM
Last Updated : 18 Apr 2016 07:37 AM

கிண்டி சிறுவர் பூங்காவில் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: ‘யாதும் ஊரே’ அமைப்பு ஏற்படுத்துகிறது

‘யாதும் ஊரே’ அமைப்பு சார்பில் உலக புவி தினத்தை ஒட்டி, மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி கிண்டி சிறுவர் பூங்காவில் ஏப்ரல் 22-ம் தேதி நடைபெறுகிறது.

‘யாதும் ஊரே’ அமைப்பு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மரம் நடுதல், பராமரித்தல், நீர்நிலை பராமரிப்பு, கழிவுப் பொருட்கள் மேலாண்மை ஆகிய பணிகளை மேற்கொண்டு வருவதுடன், அது தொடர்பான விழிப்புணர்வையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, உலக புவி தினமான ஏப்ரல் 22-ம் தேதி, கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சுற்றுச்சூழல் தொடர்பான ஓவியம் வரையும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக அதன் செய லர் ஜெய கூறும்போது, “வருங் காலத் தலைமுறையினரான இன்றைய மாணவர்கள் மத்தி யில் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை காப்பதற்கு, அவர்களை பொறுப்பாளர்களாக மாற்றுவதற்காகவும், வரும் ஏப்ரல் 22-ம் தேதி கிண்டி சிறுவர் பூங்காவில் சுற்றுச்சூழல் தொடர்பான ஓவியம் தீட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக் கிறோம். அதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 500 மாணவர்கள் பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த ஓவியங்களை, பூங்கா நிர்வாகம் அனுமதித்துள்ள சுவர்களில் வரைய உள்ளனர்.

23-ம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள சுவர்களில் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட உள்ளன.

25-ம் தேதி

25-ம் தேதி, பெசன்ட்நகர் எலி யட்ஸ் கடற்கரையில் நடைபெற்று வரும் ‘கார்கள் இல்லாத ஞாயிறு’ விழாவில், சுற்றுச்சூழல் தொடர்பான அரங்கங்கள் அமைக் கப்பட உள்ளன. மேலும் அங்கு பாரம்பரிய மரங்கள், மழைநீர் சேகரிப்பு குறித்தும் பொதுமக் களுக்கு விளக்கம் அளிக்கப்படும். கலைக் குழுவின் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் அங்கு நடைபெறும்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x