Last Updated : 13 Apr, 2016 09:05 AM

 

Published : 13 Apr 2016 09:05 AM
Last Updated : 13 Apr 2016 09:05 AM

சிறிய கட்சிகளுக்கு 73 தொகுதிகள் ஒதுக்கி தாராளம்: பாஜக நிர்வாகிகள் கடும் அதிருப்தி

சிறிய கட்சிகளுக்கு 73 தொகுதி களை பாஜக ஒதுக்கியுள்ளதால் அக்கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணி முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே), புதிய நீதிக் கட்சி, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், கொங்கு ஜனநாயகக் கட்சி, லோக் ஜனசக்தி கட்சி, அகில இந்திய முஸ்லிம் முன் னேற்றக் கழகம் ஆகிய கட்சி களுடன் பாஜக கூட்டணி பேச்சு நடத்தி வந்தது.

கூட்டணி கட்சிகளுக்கு 54 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு 180 தொகுதிகளில் போட்டியிட பாஜக முடிவு செய்திருந்தது. ஆனால் ஐஜேகே, புதிய நீதிக் கட்சி ஆகியவை தலா 50 தொகுதிகளை பிடிவாதமாக கேட்டன. அதைத் தொடர்ந்து ஐஜேகேவுக்கு 45, தேவநாதன் கட்சிக்கு 24, கொங்கு ஜன நாயக கட்சிக்கு 4 என 73 தொகுதிளை நேற்று முன்தினம் பாஜக ஒதுக்கியது. இது பாஜக நிர்வாகிகளிடம் கடும் அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாஜக மாநில நிர்வாகி ஒருவர் கூறிய தாவது:

கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு 2.2 சதவீத வாக்கு களை பெற்றது. கூட்டணி முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டதால் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு குறைந்தது 5 சதவீத வாக்கு களையாவது பெற வேண் டும். மத்தியில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கும்போது இதை சாதித் துக் காட்ட வேண்டும் என முடி வெடுக்கும் இடத்தில் உள்ள கட்சித் தலைவர்களிடம் வலியு றுத்தினோம். ஆனால், தொகு திக்கு 10 பேர் கூட இல்லாத கட்சிகளுக்கெல்லாம் 45, 24 என தொகுதிகளை ஒதுக்கி யிருப்பதன் மூலம் கட்சித் தொண் டர்களின் மனதைகாயப்படுத்தி யுள்ளனர். இதனால், வெற்றி வாய்ப்புள்ள கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களில்கூட பாஜக தோற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ‘தி இந்து’விடம் பேசிய பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் பலரும் இதே கருத்தையே தெரிவித்தனர்.

பாஜக வேட்பாளர் பட்டிய லிலும் அதிருப்தி எழுந்துள்ளது. சென்னை மயிலாப்பூர் தொகுதி யைப் பெற கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் போட்டி போட் டனர். ஆனால், சரத்குமார் கட்சி யில் இருந்து ஒரு மாதத்துக்கு முன்பு பாஜகவில் சேர்ந்த கரு.நாக ராஜனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதுபோல, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட முன் னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அண்ணன் பேரன் ஷேக் சலீம் விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு அளிக்க வில்லை. இதனால் அவரும் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x