தமிழகம் முழுவதும் இன்று வெப்பம் தணிந்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் இன்று வெப்பம் தணிந்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் இன்று வெப்பம் தணிந்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக் குநர் பாலச்சந்திரன் கூறும்போது, “தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து ஈரப்பதம் நிறைந்த காற்று வீசுவதால் தமி ழகத்தில் கடந்த சில நாட்களாக இருந்த அளவைவிட வெயிலின் கடுமை சற்று தணியும். இந்த மாதத் துக்கான இயல்பை ஒட்டியே வெப்பம் பதிவாகும்” என்றார்.

தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், ஆய்க்குடி, ஈரோடு மாவட்டம் தாளவாடி ஆகிய இடங்களில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

ஏப்ரல் 28-ம் தேதி (நாளை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். 29, 30-ம் தேதிகளில் தமிழகத் தில் பரவலாக ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தருமபுரி, கரூர் பரமத்தி ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் நேற்று 40 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியிருந்தது.

கடும் வெயிலுக்கு இருவர் பலி

கோவை கணபதிபுதூரில் நேற்று முன்தினம் கட்டிடப் பணி யில் ஈடுபட்ட எஸ்.சுரேஷ் என்பவர் கடும் வெயில் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நேற்று சாலையில் நடந்து சென்ற தொழிலாளி ஒருவர் சுருண்டு விழுந்து வெயிலுக்கு பலியானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in