Published : 31 Mar 2022 06:53 AM
Last Updated : 31 Mar 2022 06:53 AM
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே செங்கல் சூளைகளில் தோல் கழிவுகளை கொட்டி எரிப்பதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் பெரிய வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், செங்கல் சூளைகளில் தோல் கழிவுகளை கொட்டி எரியூட்டப்படுவதால், அதிலிருந்து வெளியேறும் கரும் புகையினால் பொது மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், வயதானவர்கள், பெண்கள் கடுமையாக பாதிக் கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘விநாயகபுரம் கிராமத்தைச் சுற்றி 20-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. முன்பெல்லாம் செங்கல் தயாரிக்க விறகு, மரத்தூள், காய்ந்த ஓலைகளை செங்கல் சூளை உரிமையாளர்கள் பயன் படுத்தி வந்தனர். தற்போது, ஆம்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் தோல் கழிவுகள், தோல் பொருட் களை பயன்படுத்தி செங்கல் தயாரிக்கின்றனர்.
தோல் கழிவுகளை தீயில் போட்டு எரிப்பதால் விநாயகபுரம் பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறிவிடுகிறது. குழந்தைகளும், முதியவர்களுக்கும் மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்படு கின்றனர். மேலும், தோல் கழிவுகள் எரிக்கப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. கண் எரிச்சல், சுவாசக் கோளாறு, அடிக்கடி தும்மல், சரும பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
ஆஸ்துமா நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து செங்கல் சூளை உரிமையாளர்களிடம் முறையிட்டால் அவர்கள் எங்களை மிரட்டு கின்றனர். வேண்டுமென்றால் ஊரை காலி செய்துவிட்டு வேறு எங்கயாவது சென்று குடியேற சொல்கிறார்கள். இதை எதிர்த்து போராட்டம் நடத்த முயன்றால் கடுமையாக விளைவுகளை சந்திப்பீர்கள் எனக்கூறி மிரட்டு கின்றனர்.
ஊராட்சி மன்ற அலுவலகம், மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காவல் துறை என பலரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விநாயகபுரம் பகுதியில் ஆய்வு நடத்தி விதி முறைகளை மீறி செயல்படும் செங்கல் சூளைகளை மூட உத்தர விட வேண்டும்.
செங்கல் சூளை உரிமை யாளர்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT