

சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ்.ஏழுமலை தனது பெயரில் சொத்து எதுவும் இல்லை என வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தொகுதிக்கான வேட்பு மனு கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தேமுதிக மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.ஏழுமலை, சைதாப்பேட்டை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் பொற்கொடியிடம் நேற்று மதியம் 1.30 மணிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அப்போது கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கழககுமார் (மதிமுக), அகமது (தேமுதிக), ஜேக்கப் (விசிக) ஆகியோர் உடன் இருந்தனர்.
வேட்புமனுவில், தனது பெயரில் சொத்து ஏதும் இல்லை என்றும் வங்கிக் கணக்கில் ரூ.23,379 இருப்பதாகவும், தனது மனைவி பெயரில் சுமார் ரூ.98 லட்சம் மதிப்புள்ள வீடு இருப்பதாகவும் சொத்துக் கணக்கில் தெரிவித்துள்ளார்.