Published : 20 Apr 2016 08:11 AM
Last Updated : 20 Apr 2016 08:11 AM

திருத்துறைப்பூண்டி அருகே 2 கோயில்களில் ரகசிய பூஜை நடத்திய அமைச்சர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி அருகே 2 கோயில்களில் அமைச்சர் ஜெயபால் நேற்று ரகசிய பூஜை நடத்தினார்.

திருத்துறைப்பூண்டி அருகே யுள்ள கீரக்களூர் புஞ்சையூர் கிராமத்தில் அர்த்தநாரீஸ்வரர் சித்தர் பீடம் உள்ளது. பக்தர்கள் தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி, சுவாமி மீது வைத்து அபிஷே கம் செய்தால், அபிஷேக நீர் பட்டு மனுவில் உள்ள வாசகங்கள் அழிந்துவிடுதைப் போல, துன்பங் களும் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

இதனால், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர் களும் இங்கு வந்து, தங்களது கோரிக்கை நிறைவேறுவதற்காக சிவனுக்கு பாலாபிஷேகம் செய்து, வழிபட்டு வருகின்றனர்.

தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயபால் இக்கோயி லுக்கு நேற்று காலை வந்து, சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டார். இதேபோல, திரு விடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலிலும் சுவாமிக்கு பாலாபி ஷேகம் செய்து, ஒரு மணி நேரம் சிறப்பு பூஜை நடத்தியுள்ளார்.

இதுகுறித்து அர்த்தநாரீஸ்வரர் சித்தர் பீடத்தில் குறிசொல்லும் கோவிந்தராஜ் கூறும்போது, “2011 தேர்தலுக்கு முன் அர்த்தநாரீஸ்வரர் சித்தர் பீடத்தில் வழிபட்ட ஜெய பாலிடம், 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அமைச்சராவீர்கள் என்று தெரிவித் தேன். அதன்படி அமைச்சரான தால், தொடர்ந்து இக்கோயிலுக்கு வந்து செல்கிறார். தற்போது, முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கவும், மீண்டும் முதல்வராக வேண்டியும், ஜெயலலிதாவின் பெயர், நட்சத்திரத்துக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்துள்ளார்” என்றார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அமைச்சர் ஜெய பாலுக்கு வாய்ப்பு வழங்கப்படாத, கட்சியின் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுவிட்ட நிலை யில், அதிமுகவினர் யாருக்கும் தெரியாமல் பூஜையை ஜெயபால் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x