தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் சில தொகுதிகள் மாற்றம்

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் சில தொகுதிகள் மாற்றம்
Updated on
1 min read

முதுகுளத்தூர், மன்னார்குடி, கள்ளக்குறிச்சி, திண்டிவனம் ஆகிய நான்கு தொகுதிகளை தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் தங்கள் கட்சிகளுக்குள் மாற்றிக் கொண்டன.

இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தேமுதிக தலைவர் விஜயகாந்த், கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோரின் ஒப்புதலுடன் கீழ்கண்ட தொகுதிகள் மாற்றிக்கொள்ளப்பட்டன.

ஏற்கெனவே செய்துகொண்ட உடன்பாட்டின்படி தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த முதுகுளத்தூர் (212) சட்டமன்ற தொகுதி மதிமுகவிற்கும், மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த மன்னார்குடி (167) சட்டமன்ற தொகுதி தேமுதிகவிற்கும் மாற்றிக் கொள்ளப்பட்டன.

தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி (080) சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த திண்டிவனம் (072) தொகுதி தேமுதிகவிற்கும் மாற்றிக் கொள்ளப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in