

இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் கள் 227 பேரும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சியினரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளனர். சென்னையில் இன்று (9-ம் தேதி) தொடங்கி மே 12-ம் தேதி வரை 14 இடங்களில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெய லலிதா பிரச்சாரம் செய்கிறார்.
இந்நிலையில், 234 தொகுதி களிலும் தேர்தல் பிரச்சார அலுவல கத்தை இன்று (9-ம் தேதி) பகல் 11 மணி முதல் 12 மணிக்குள் திறக்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் கள், மாவட்டச் செயலாளர்கள், நகரம் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் தேர்தல் அலுவலக திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிரச்சார பொதுக் கூட்டத்தின் கடைசிக் கூட்டம் வேலூரில் மே 12-ம் தேதி நடைபெற உள்ளது. அப்போது, வேலூர் மாவட் டத்தில் உள்ள 13 தொகுதிகளின் வேட்பாளர்கள் மற்றும் திரு வண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, போளூர், கலசப்பாக்கம், செங்கம் (தனி) தொகுதிகளின் வேட்பாளர்கள் என 17 வேட்பாளர்களை ஜெயலலிதா அறிமுகம் செய்துவைத்து பிராச் சாரத்தை நிறைவு செய்கிறார்.
இதுகுறித்து, அதிமுக நிர்வாகி கள் கூறும்போது, ‘‘கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் வேலூர் அடுத் துள்ள இறையங்காடு கிராமத்தில் நடந்தது. அதே இடத்தில் மே 12-ம் தேதிக்கான பிரச்சார பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். அங்குதான் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிச் செல்வதற்கான வசதி இருக்கிறது’’ என்றனர்.