தருமபுரி அருகே பரிதாபம்: லாரி மீது கார் மோதி குழந்தை உட்பட 4 பேர் பலி

தருமபுரி அருகே பரிதாபம்: லாரி மீது கார் மோதி குழந்தை உட்பட 4 பேர் பலி
Updated on
1 min read

தருமபுரி அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் கர்நாடகா வைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் தும்கூர் அடுத்த மூகாம்பிகை நகர் லிங்கா சாலையைச் சேர்ந்தவர் சந்திர பானு(66). இவரது மனைவி சத்யா வதி(61). இவர்களின் மகன் அம் ருத்(38), இவரது மனைவி விமலா(35), இவர்களின் குழந்தை கள் ஜோன்(13), ஜோனா(1), ஜரூஷ்(1), சந்திரபானுவின் மற் றொரு மகன் புனிஷ்குமார்(35), அவரது மனைவி பூஜா(27), இவர் களின் குழந்தை ஜேக்(2), சந்திர பானுவின் மகள் சுஷ்மா(33) ஆகிய 11 பேர் நேற்று வேளாங்கண்ணிக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர்.

காரை அம்ருத் ஓட்டிச் சென் றார். நேற்று காலை 10.30 மணியள வில் கார் தருமபுரி அடுத்த குண் டலப்பட்டியை கடந்து சென்று கொண்டிருந்தது. மாட்டுக்காரனூர் பிரிவு ரோடு பகுதியில் சென்றபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியின் மீது கார் உரசியது. இதில் நிலை தடுமாறிய கார் சாலையோரம் இருந்த விவ சாய நிலத்தில் சுமார் 100 அடி தூரம் உருண்டது.

விபத்தில் பூஜா, சுஷ்மா, சத்தியாவதி, பூஜாவின் குழந்தை ஜேக் ஆகிய 4 பேரும் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தனர். சந்திர பானு, புனிஷ்குமார், ஜோன், விமலா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அம்ருத் மற்றும் அவரது குழந்தை களான ஜோனா, ஜரூஷ் (இரட் டையர்) ஆகிய மூவரும் லேசான காயங்களுடன் தப்பினர்.

பலத்த காயமடைந்தவர்களை உடனடியாக தருமபுரி அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஜோன்(13) மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோகநாதன் நேரில் பார்வையிட்டு மீட்புப் பணிகளை வேகப்படுத்தினார். விபத்து குறித்து தருமபுரி நகர போலீஸார் விசாரிக்கின்றனர்.

தருமபுரி அடுத்த காரிமங்கலம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த கார் விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் பெரிய விபத்து நடந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in