புதுச்சேரியில் திமுக 9; காங்கிரஸ் 21 இடங்களில் போட்டி

புதுச்சேரியில் திமுக 9; காங்கிரஸ் 21 இடங்களில் போட்டி
Updated on
1 min read

புதுச்சேரியில் திமுக 9 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் போட்டியிடுவதென தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

வரும் சட்டப் பேரவை தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து திமுக போட்டியிடுகிறது.

இந்நிலையில் இன்று திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டது. முன்னதாக புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள் நாராயணசாமி, சிவக்குமார் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தனர். அதன் பின்னர் தொகுதி உடன்பாடு அறிவிப்பு வெளியானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in