சென்னையில் தனியார் பள்ளி வாகனம் மோதி 2-ம் வகுப்பு மாணவர் பலி: வேன் ஓட்டுநர் கைது

பள்ளி வாகனம் மோதிய விபத்தில் பலியான மாணவர் தீக்சித்
பள்ளி வாகனம் மோதிய விபத்தில் பலியான மாணவர் தீக்சித்
Updated on
1 min read

சென்னை: சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவர் தீக்சித் பலியானார். விபத்து ஏற்படுத்திய பள்ளி வாகன ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் தீக்சித் ஆழ்வார் திருநகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேசன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இன்று வழக்கம்போல், மாணவர் தீக்சித் பள்ளி வேனில் பள்ளிக்கு வந்துள்ளார் . வேனில் இருந்து மற்ற மாணவர்கள் இறங்கி சென்றபோது, வேனில் தான் மறந்து வைத்துவிட்டு வந்த பொருளை எடுப்பதற்காக பள்ளி வேனை நோக்கி திரும்பி தீக்சித் வந்துள்ளார்.

அப்போது வேனை பார்க்கிங்க செய்வதற்காக வாகன ஓட்டுநர் பூங்காவனம் வேனை ரிவர்ஸ் எடுத்துள்ளார். இதனால், வேனில் ஏற முயற்சித்த மாணவர் தீக்சித் தவறி கீழே விழுந்து வேனில் சிக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவர் தீக்சித் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in