பெரியாறு அணையை பாதுகாக்க பீர்மேடு தொகுதியை கைப்பற்ற அதிமுக தீவிரம்

பெரியாறு அணையை பாதுகாக்க பீர்மேடு தொகுதியை கைப்பற்ற அதிமுக தீவிரம்
Updated on
1 min read

பெரியாறு அணையை பாதுகாக்கும் பொருட்டு பீர்மேடு தொகுதியை கைப்பற்றும் முயற்சியில் அதிமுக ஈடுபட்டுள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் இடுக்கி, தொடுபுழா, பீர்மேடு, உடுமன்சோலை, தேவி குளம் ஆகிய 5 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பல ஆயிரம் பேர் தங்கி தேயிலை, காபி, ஏலக்காய் தோட்டங்களில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

பீர்மேடு தொகுதியில் சுமார் 1.80 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 60 சதவீதம் பேர் தமிழக தொழிலாளர்கள். இவர்களே அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர்.

அதனால் தான் அவர்களின் வாக்குகளை குறி வைத்து, தொழிலாளர்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்குப் பாடுபடு வோம். என்று கூறி இதுவரை நடைபெற்ற சட்டப் பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் அம்மாநில முக்கிய கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள் அரசி யல் செய்து வருகின்றன.

இதற்கு காரணம் பீர்மேடு தொகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை ஆகும். பீர்மேடு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ பிஜுமோள் தனது ஆதரவா ளர்களுடன் 6 மாதங்களுக்கு முன்பு பெரியாறு அணை பகுதியில் அத்துமீறி நுழைந்து அணையை சேதப்படுத்த முயன்றார். இதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு அம்மாநில அமைச்சர் அடூர் பிரகாஷ் தலைமையிலான அரசு அதிகாரிகளும் அணை பகுதியில் அத்துமீறி நுழைந்தனர்.

இந்த சம்பவங்களுக்கு தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதேபோல் மற்றொரு சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்கவும், அணையை பாதுகாக்கும் பொருட் டும் பீர்மேடு தொகுதியை கைப்பற்றியே தீர வேண்டும் என அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.

இதற்காக அந்த தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக ஆண்டிபட்டி தொகுதி எம்எல்ஏ தங்கதமிழ்செல்வனை நேற்று முன்தினம் நியமித்துள்ளது. இது குறித்து ‘தி இந்து’விடம் பீர்மேடு ஊராட்சி மன்ற 1-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பிரவீனா கூறியதாவது:

பெரியாறு அணை பிரச்சினையை தீர்க்கவும், நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும், பீர்மேடு தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றே தீரவேண்டும் wஎன்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி தங்கதமிழ்செல்வன் எம்எல்ஏ தலைமையில் கட்சி நிர்வாகிகள் பீர்மேடு தொகுதியில் தங்கி தமிழக வாக்காளர்களை சந்திப்பது, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் இணைந்து இடுக்கி மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள் 3 பேரும் தேர்தல் வேலை செய்து வருகிறோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in