

மதுரையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் செந்தில்குமரனுக்கு ‘வேர்ல்ட் பிரஸ் போட்டோ’ சர்வதேச விருது கிடைத்துள்ளது.
‘வேர்ல்ட் பிரஸ் போட்டோ' அறக்கட்டளை சார்பில் சர்வதேச அளவில் புகைப்பட கலைஞருக்கான விருதில் 130 நாடுகளில் இருந்து 4,066 பேர் பங்கேற்றனர். இதில் 23 நாடுகளை சேர்ந்த 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மதுரையை சேர்ந்த புகைப்பட கலைஞர் செந்தில்குமரன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
புலிகளுக்கும், மனிதர்களுக்குமான வாழ்வியல் குறித்த படத்துக்கு இவ்விருது கிடைத்துள்ளது. அவருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.