Published : 19 Apr 2016 08:25 AM
Last Updated : 19 Apr 2016 08:25 AM

வேட்பாளர் பட்டியல் எப்போது? - பொன்ராஜ் தகவல்

அப்துல் கலாம் லட்சிய இந்தியா இயக்கத்தின் உறுப்பினர்களுக்கான தலைமைப் பண்பு மற்றும் மாற்றத்துக்கான சாசனம் குறித்த பயிற்சி மதுரை விரகனூர் அருகே நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைப்பின் தலைவர் பொன்ராஜ் கூறும்போது, ‘‘நேர்மையான, மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் கொண்டவர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு வாரத்துக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இளைஞர்கள் 60 சதவீதம் பேர் மற்றும் அனுபவம் வாய்ந்த 40 சதவீதம் பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x