

உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் உளுந் தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத் தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தபோது, அவரது மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் அவரை கைத்தாங்கலாக அலுவலக அறைக்குள் அழைத்து வந்தனர்.
அறையிலிருந்த உளுந்தூர்பேட்டை வட்டாட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான முகுந்தன், விஜயகாந்த் அறைக்குள் நுழைந்ததும் அவரை வரவேற்றார்.
சிறிதுநேரம் அமர்ந்திருந்த விஜய காந்த், தன்னை படமெடுத்துக்கொண் டிருந்த பத்திரிகையாளர்கள் ஒவ்வொரு வரையும், 'எந்த பத்திரிகை?' என்று கேட்க, பக்கத்தில் அமர்ந்திருந்த பிரேமலதா, விஜயகாந்த்தின் கையில் லேசாக தட்டவே அமைதியானார்.
பின்னர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு, வேட்புமனுக் கான கட்டணத் தொகை ரூ.10 ஆயிரத் தையும் தானே எண்ணி வட்டாட்சியரிடம் வழங்கினார். சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, வேட்புமனுவின்போது உறுதிமொழி எடுத்துக்கொள்வது தொடர்பாக வட்டாட்சியர் ஏதோ கூற, அதற்கு பதிலளித்த விஜயகாந்த், ‘இப்பவே உறுதிமொழி எடுப்பதைவிட, வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு எந்தெந்த வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டிருக்கிறதோ அவர்களிடம் மட்டுமே உறுதிமொழி வாங்கலாமே' என்றார். அதற்கும் வட்டாட்சியர் சிரித்துக் கொண்டே, 'இல்ல சார் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி வேட்புமனுவுக்கு முன்னர் ஒருமுறை உறுதிமொழி ஏற்க வேண்டும்’ என்றார்.
வட்டாட்சியர் முகுந்தன் கூறியது சரியாக காதில் விழாததால், விஜயகாந்த் டேபிள் மீது தலையை சாய்த்தவாறு, முகுந்தனிடம் பேச முயற்சிக்கவும், முகுந்தனும் அவருடன் நெருங்கி ரகசியம் பேசுவதுபோல் பேசினார். ‘அட இவங்களுக்குள்ள என்னதான்பா ரகசியம் பேசிக்கிறாங்க’ என்று அங்கிருந்தவர்கள் முணுமுணுத்தனர்..
பின்னர் உறுதிமொழி ஏற்பு படிவத்தை முகுந்தன் வாசிக்க, அதை திரும்ப வாசித்தார் விஜயகாந்த்.
விஜயகாந்த், பத்திரிகையாளர்கள் மீது சற்று கோபத்தை உமிழ்வது வாடிக்கை. ஆனால் வேட்புமனு தாக் கலின்போது, பெரும் கூட்டத்துக்கு இடையே வட்டாட்சியர் அலுவலகத்தில் நுழைந்த விஜயகாந்த், சற்று ஜாலி யாகவே இருந்தார். வேட்புமனு தாக் கல் செய்தபோது, ‘சார் இந்த பக்கம் பாருங்க’ என்று புகைப்படக்காரர்கள் கூறியபோது அவர்களுக்கு ஏற்றவாறு முகத்தை திருப்பி, சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்தார். விஜய காந்தின் வேடிக்கையான செயல்பாடு களை பார்க்க கூடியிருந்தவர்கள் ஆர்வம் காட்டினர்.