Published : 07 Apr 2016 11:18 AM
Last Updated : 07 Apr 2016 11:18 AM

திமுக கூட்டணிக்கு 300 அமைப்புகள் ஆதரவு

திமுக கூட்டணிக்கு இதுவரை சுமார் 300 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி, சமூக சமுத்துவப் படை ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. இதுதவிர பல்வேறு சமூக, ஜாதி, மத, மொழி அடிப்படையிலான அமைப்புகளும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

தெற்கு சீமை மக்கள் இயக்கம், அகமுடையார் சங்கம் (தமிழ்நாடு), சோஷலிஸ்ட் ஜனதா கட்சி, இந்திய கிறிஸ்தவர் முன்னணி, தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், புதிய மூர்மார்க்கெட் சிறுகடை வியாபாரிகள் சங்கம், தமிழக நிலத் தரகர்கள் சங்கம், சென்னை மாநகர ஆதிதிராவிடர் நல கூட்டமைப்பு, ராஷ்ட்ரீய ஜனதாதளம் (தமிழ்நாடு), அனைத்து சமுதாய மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 22 அமைப்புகளின் நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதுவரை சுமார் 300 அமைப்புகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x