

விருதுநகர்: விருதுநகரில் பாலியல் வன் கொடுமைக்கு ஆளான பெண்ணிடம் சிபிசிஐடி போலீஸார் நேற்று 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
விருதுநகரில் 22 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி அதிகாரிகளிடம் நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் சிபிசிஐடி போலீஸார் பாலியல் பலாத்காரம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 6 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப் பதிவு செய் தனர்.
விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி சரவணன், சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான டிஎஸ்பி வினோதினி ஆகியோரிடம் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி நேற்று காலை ஆலோசனை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி, டிஎஸ்பி வினோதினி ஆகியோர் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஹரிஹரன் உட்பட 4 பேரையும், ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே தென்மாவட்டங் களைச் சேர்ந்த சிபிசிஐடி போலீஸார் விருதுநகருக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விசார ணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கைதானவர்களின் வீடுகள், பாலியல் வன்கொடுமை நடந்த இடங்களுக்குச் சென்று அங்குள்ள பிற ஆவணங்களை சேகரிக்கவும், தடயங்களைக் கைப்பற்றவும் சிபிசிஐடி போலீஸார் திட்டமிட் டுள்ளனர்.
மேலும் பாலியல் வன்கொடுமை தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வீடியோ, புகைப்படங்களை யார் யாருக்கு எப்போது பகிரப்பட்டுள் ளது, இதில் தொடர்புள்ளவர்கள் யார் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸாரின் உதவி யோடு சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாடசாமியை ஜாமீனில் விடுவிக்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை திங்கள்கிழமை நடக்கிறது.