Last Updated : 27 Apr, 2016 09:07 PM

 

Published : 27 Apr 2016 09:07 PM
Last Updated : 27 Apr 2016 09:07 PM

என்.ஆர்.காங்கிரஸில் 21 வேட்பாளர்களை முதல்கட்டமாக ரங்கசாமி அறிவிப்பு

என்.ஆர்.காங்கிரஸில் போட்டியிடும் 21 தொகுதி வேட்பாளர்களை ரங்கசாமி முதல்கட்டமாக அறிவித்தார். தேர்தலில் தனித்து போட்டியிட எவ்வித தயக்கமும் இல்லை. வரும் 29ம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலே கட்சியின் தலைவர் ரங்கசாமி நேற்று இரவு கட்சி அலுவலகத்தில் அறிவித்தார். அதன் விவரம்:

இந்திரா நகர் - ரங்கசாமி, காரைக்கால் வடக்கு- திருமுருகன், திருநள்ளாறு- சிவா, நெடுங்காடு- பிரியங்கா, நிரவி டிஆர் பட்டிணம்- உதயகுமார், காரைக்கால் தெற்கு- சுரேஷ், ஏனாம்- பைரவசாமி, கதிர்காமம்- என்.எஸ்.ஜே. ஜெயபால், மண்ணாடிப்பட்டு- டிபிஆர் செல்வம், உழவர்கரை- பன்னீர்செல்வம், மங்களம்- சுகுமாறன், வில்லியனூர்- தேனி ஜெயக்குமார், முத்தியால்பேட்- பிரகாஷ்குமார், உப்பளம்- ஆனந்த், உருளையன்பேட்டை- நேரு, தட்டாஞ்சாவடி- அசோக் ஆனந்த், முதலியார்பேட்டை - பாலன், அரியாங்குப்பம்- சபாபதி, ராஜ்பவன்- அனிபால் நேரு, மாஹே- ரகுமான், பாகூர்- தியாகராஜன்.

முதல்கட்டமாக 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு்ளனர். மீதமுள்ள 9 தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். வரும் 29ம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்யப்படும். அதையடுத்து பிரசாரம் உடனடியாக தொடங்கும்-அதையடுத்து தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

அதைத்தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸுக்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம் என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, "யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பது புதுச்சேரி மக்களுக்கு தெரியும். கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தியுள்ளோம். மீண்டும் வெற்றி தேடி வரும்" என்று குறிப்பிட்டார்.

முடிவு அறிவிப்பதில் தாமதமென்ன என்று கேட்டதற்கு, "தேர்தலில் தனித்து போட்டியிட எவ்வித தயக்கமும் இல்லை. மக்கள் ஆதரோடு தேர்தலை சந்திப்போம். அரசு செயல்பாடுகளே வெற்றியை உறுதி செய்யும்" என்று குறிப்பிட்டார்.

தள்ளிவைப்புக்கு காரணமென்ன?: என்.ஆர்.காங்கிரஸில் தற்போது நிலவும் பிரச்சினை தொடர்பாக எதிர்பார்க்கப்பட்ட முக்கியத்தொகுதிகளான காலாப்பட்டு, ஊசுடு, லாஸ்பேட்டை, திருபுவனை, ஏம்பலம் உட்பட 9 தொகுதிகளுக்கு முதல்கட்ட பட்டியலில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இதனால் கட்சி அலுவலகத்தின் உள்ளேயும், வெளியேயும் திரண்டிருந்த கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர். அத்துடன் வேட்பாளர்களை யோசித்து, சிறிது இடைவெளி விட்டே பட்டியலை ரங்கசாமி அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x