

கோவை: சத்யா ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் குரூப் 2, குரூப் 2-ஏ தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு 2 நாட்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து சத்யா ஐ.ஏ.எஸ். அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசுப் பணியில் உள்ள குரூப் 2 மற்றும் குரூப் 2-ஏ நிலையில் 5,413 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகளை சத்யா ஐ.ஏ.எஸ். அகாடமி ஈரோட்டில் நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இந்த தேர்வில் உள்ள பொது தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்துக்கான இரண்டு நாள் இலவச பயிற்சி முகாமை சத்யா ஐ.ஏ.எஸ். அகாடமி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (இன்று மற்றும் நாளை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்த உள்ளது.
தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்துக்கு ஏற்ப மொழித்தாளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 200 கேள்விகளில் 100 கேள்விகள் மொழித்தாளிலிருந்து கேட்கப்படவுள்ளன. எனவே வெற்றியை தீர்மானிக்கும் மிக முக்கிய தாளாக மொழித்தாள் உள்ளது. அதனை கருத்தில் கொண்டு பொது தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்துக்கான இரண்டு நாள் இலவச பயிற்சி வகுப்புகளை மேற்கூறப்பட்ட நாட்களில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அனுபவம் உள்ள வல்லுநர்களை காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி போன்ற நகரங்களிலிருந்து வரவழைத்து பயிற்சியளிக்கப்பட உள்ளது. இலக்கணப் பகுதிகளுக்கென்று இலவச கையேடுகள் வழங்கப்படவுள்ளன.
இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவோர் ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள நல்லி மருத்துவமனை வீதியில் செயல்பட்டு வரும் சத்யா ஐ.ஏ.எஸ். அகாடமியை 0424-2226909, 0424-3558373, 7401521948 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம். கடந்த குரூப்-2 தேர்வில் சத்யா ஐ.ஏ.எஸ். அகாடெமியில் படித்த 156 பேர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.l