

சென்னை: பள்ளிக் கல்வித்துறை ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின்கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நிலையில் உள்ள உபரி பணியிடங்கள் மற்றும் அதில் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக சமர்பிக்க தமிழக அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து 2019-ம் ஆண்டுக்கு பின்னர் நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரியாக பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து அனைத்து முதன்மைக்கல்வி அதிகாரிகளும் இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் இருந்த உபரி ஆசிரியர்கள் சமீபத்தில் பணிநிரவல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.