Published : 04 Apr 2016 08:03 AM
Last Updated : 04 Apr 2016 08:03 AM

தேர்தல் புகார்களை தெரிவிக்க தொடர்பு எண்கள் வெளியீடு

சென்னையில் தேர்தல் நன்னடத்தை விதிமீறல்கள் தொடர்பாக புகார்கள் தெரிவிக்க மாவட்ட தேர்தல் நிர்வாகம் சார்பில் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நன்னடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க 18004257012 என்ற தொடர்பு எண் வழங்கப்பட்டிருந்தது. இனி அந்த எண் மட்டுமல்லாது, வருமான வரித்துறை- 18004256669, காவல்துறை- 04423452437 ஆகிய எண்களுக்கும் தொடர்பு கொண்டு தேர்தல் புகார்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x