Published : 26 Apr 2016 03:51 PM
Last Updated : 26 Apr 2016 03:51 PM

அதிமுகவுக்கு எதிராக மதுவிலக்கு அஸ்திரம்: குமரியில் எதிர்க்கட்சிகள் வியூகம்

மதுக்கடை ஒன்றை மூட வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் செல்பேசி கோபுரம் மீது ஏறி போராடியபோது காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார். ஆனால், அதன் பிறகும் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள மதுக் கடைகள் அகற்றப்படவில்லை.

இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் மக்களிடையே அதிமுக வுக்கு எதிராக மதுவிலக்கு விவகா ரத்தை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடையில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வந்த மதுக்கடையை மூடக் கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் 31-ம் தேதி செல்பேசி கோபுரம் மீது ஏறி போராடிய காந்தியவாதி சசிபெருமாள் உயிரி ழந்தார். இதனைத் தொடர்ந்து பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, சசிபெருமாளின் குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தை நடத்தினர். ஆனால் மதுவிலக்கு விவகாரத்தில் கடைசி வரை அதிமுக அரசு, அசைந்து கொடுக்கவில்லை.

கடைகளுக்கு பூட்டு

சசிபெருமாள் உயிர் நீத்ததைத் தொடர்ந்து, மதுவிலக்கு கோரி குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடை பெற்றன. மதிமுக இவ்விவகா ரத்தை முன்னெடுத்துச் சென் றது. ஆற்றூர் பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, செல்பேசி கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்திய மாணவர் டேவிட்ராஜ் காவல் துறையால் தாக்கப்பட்டார்.

விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதரணி உட்பட காங்கிரஸ் கட்சியினர் டெரிக் சந்திப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை பூட்டி போராட்டம் நடத்தினர்.

தேமுதிக மாவட்ட செயலாளர் ஜெகன்னாதன் செட்டிக்குளம் பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையை பூட்டிப் போராட்டம் நடத்தினார். அதிமுக தவிர்த்த, பிற கட்சிகள் சார்பில் குமரி மாவட்டத்தில் பந்த் நடைபெற்றது.

தொடரும் போராட்டம்

தொடர்ந்து டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் ஈடுபட்டன. மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது மதுவுக்கு எதிராக வைக்கப்பட்டிருந்த பதாகைகள் அகற்றப்பட்டன.

சில வாரங்களுக்கு முன்பு கூட நுள்ளிவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பெண்கள் திரளானோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கைதானர்கள்.

எதிர்க்கட்சிகளின் அஸ்திரம்

இப்போது குமரி மாவட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாஜக, மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள், அதிமுக அரசுக்கு எதிராக இந்த மது அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளன. சமூக வலைதளங்களில் சசி பெருமாளின் மரணத்துக்கு நீதி கேட்டு பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இப்போதைய நிலையில் சசிபெருமாள் உயிர்நீத்த உண்ணா மலைக்கடையை உள்ளடக்கிய விளவங்கோடு தொகுதியில் அதி முகவை முன்னோக்கியே நகர விடாமல் முட்டுக்கட்டை போடு கிறது மதுவிலக்கு விவகாரம்.

எனவே, குமரி மண்ணில் அதிமுக வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் விவகாரமாக மதுவிலக்கு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள் ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x