Published : 24 Apr 2016 10:55 AM
Last Updated : 24 Apr 2016 10:55 AM

முதல்கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். முதல்கட்டமாக ஏப்ரல் 23-ம் தேதி (நேற்று) முதல் வரும் 30-ம் தேதி வரை பிரச்சாரம் செய்கிறார். நேற்று ஆரணி போளூரில் ராமதாஸ் பிரச்சாரத்தைத் தொடங்கினார். இன்று வந்தவாசி, செய்யாறிலும், 25-ம் தேதி குடியாத்தாம், ஆம்பூர், வாணியம்பாடி, 26-ம் தேதி ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், 27-ம் தேதி பென்னாகரம், பாலக்கோட்டில் பிரச்சாரம் செய்கிறார். 28-ம் தேதி தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், 29-ம் தேதி மேட்டூர், ஓமலூர், 30-ம் தேதி ஆத்தூர், கங்கவல்லியில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். அதன்பின் இரண்டாம்கட்ட பிரச்சாரத்தை ராமதாஸ் தொடங்குகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x