மாளிகைமேடு அகழாய்வில் 25 செ.மீ. உயர மண் பானை, 30 அடுக்கு செங்கல் சுவர் கண்டுபிடிப்பு

மாளிகைமேடு அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள மண்பானை
மாளிகைமேடு அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள மண்பானை
Updated on
1 min read

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு அகழ்வாராய்ச்சியில் 25 செமீ உயரம் கொண்ட பழங்கால மண்பானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேடு பகுதியில் தொல்லியல் தளத்தில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியினை கடந்த மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதில் தற்போது முதல் முறையாக 25 செ.மீ. உயரமும், 12.5 செ.மீ. அகலம் கொண்ட பழங்காலத்து மண்பானை ஒன்றும், மண்ணாலான கெண்டி மூக்கு மற்றும் 30 அடுக்கு கொண்ட செங்கல் சுவரும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

25 செ.மீ. உயரம் மற்றும் 12.5 செ.மீ. அகலம் கொண்ட இந்த பானையானது ஒரு பகுதி சிறிது உடைந்த நிலையில் உள்ளது. இந்த பானை தரை தளத்தில் இருந்து சுமார் 18 செ.மீ. ஆழத்தில் கிடைத்துள்ளது.

மாளிகைமேடு அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள 30 அடுக்கு சுவர்
மாளிகைமேடு அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள 30 அடுக்கு சுவர்

கல்வெட்டு ஆதாரங்களின் உதவியுடன், மாளிகைமேட்டில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட அகழாய்வில், செங்கல் அமைப்பு மற்றும் ஏராளமான கூரை ஓடுகள் வடிவில் அரச அரண்மனையின் கட்டமைப்பு எச்சங்கள் கண்டறியப்பட்டன. கடந்த 4 ஆம் தேதி செப்பு காப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது முழுமையான மண்பானை கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுவரை செப்பு நாணயங்கள், செம்பு பொருட்கள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மணிகள் மற்றும் வளையல்கள், அலங்கரிக்கப்பட்ட கற்கள் மற்றும் சீன பொருட்கள் உள்ளிட்டவை மாளிகைமேடு தளத்தில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in