14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29-ல் வேலைநிறுத்தம்: மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவிப்பு

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29-ல் வேலைநிறுத்தம்: மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29-ல் நாடுதழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சம்மேளன பொதுச்செயலர் எம்.துரைபாண்டியன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு, லாபம் ஈட்டும் எல்ஐசி நிறுவனம், நஷ்டம் ஏற்பட்டஏர் இந்தியா நிறுவனம் ஆகியவற்றை விற்கிறது. தபால் துறை,ரயில்வே, பாதுகாப்பு துறைகளைகார்ப்பரேட்டுகளிடம் கொடுக்கவும், சிறிய துறைகளை மூடவும்முடிவு செய்துள்ளது. மத்திய அரசுஅலுவலகங்களில் 8 லட்சத்து 75ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. தொழிலாளர் சங்கங்களுடன் கலந்தாலோசிக்காமல் 40-க்கும்மேற்பட்ட தொழிலாளர் சட்டங்களை 4 தொழிற்சங்க ஆணைகளாக மத்திய அரசு மாற்றியுள்ளது.

எனவே, புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத பஞ்சப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம்வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்களின்அகில இந்திய அமைப்புகள், இன்சூரன்ஸ், வங்கி உள்ளிட்ட பொதுத்துறை சங்கங்கள் ஆகியவற்றுடன் இணைந்து, வரும் 28, 29-ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

இந்த வேலைநிறுத்தத்தில் நாடுமுழுவதும் 25 கோடி பேர் பங்கேற்கஉள்ளனர். தமிழகத்தில் 50 லட்சம்பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in