தமிழகத்தில் விபத்துகளை குறைத்ததற்காக மத்திய அமைச்சர் கட்கரி பாராட்டு: நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு பெருமிதம்

தமிழகத்தில் விபத்துகளை குறைத்ததற்காக மத்திய அமைச்சர் கட்கரி பாராட்டு: நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு பெருமிதம்
Updated on
1 min read

சென்னை: சட்டப்பேரவையில் குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி.பிரின்ஸ் பேசும்போது, ‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் 2006-ல் தொடங்கப்பட்ட, ரூ.2,000 கோடி மதிப்பிலான 4 வழிச்சாலை திட்டத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் உள்ளன’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:

கேரளா-தமிழகத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 47-ல் வில்லுக்குறி வரையிலான 25.5 கி.மீ. பணிகள், ரூ.519 கோடி மதிப்பில் 2012-ல்எல் அண்டு டி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன. அதில் 70 சதவீத பணிகள் முடிந்துள்ளன. வில்லுக்குறி - கன்னியாகுமரி, நாகர்கோவில் - காவல் கிணறுஇடையிலான 42.77 கி.மீ. பணிகள், ரூ.559 கோடி மதிப்பில் அதே நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அதில் 76 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளன. அடர் மரங்கள் நிறைந்த பகுதியில் நில எடுப்புக்கு ஒப்புதல் பெற வேண்டிஇருப்பதால் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் பேசும்போது, தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளால் சாலை விபத்துகள் 15 சதவீதம்குறைக்கப்பட்டுள்ளதாக பாராட்டினார். சாலைப் பாதுகாப்பில் தமிழக மாடலைபின்பற்றப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in