Published : 25 Mar 2022 07:41 AM
Last Updated : 25 Mar 2022 07:41 AM

முன்னாள் முதல்வர் பழனிசாமியை விசாரிக்குமாறு ஆறுமுகசாமி ஆணையத்தில் வா.புகழேந்தி மனு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என்றுஅந்த ஆணையத்தில் வா.புகழேந்தி மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகள், அப்போலோ மற்றும் அரசு மருத்துவர்கள், போயஸ் கார்டன் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் விசாரிக்கப்பட்டனர். அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆணையத்தின் விசாரணை தொய்வடைந்திருந்தது.

தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகிவாக்குமூலம் அளித்து வரும்நிலையில், ஆணைய பணிகள்மீண்டும் சூடு பிடித்துள்ளன.

இந்நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில்கூறியிருப்பதாவது:

ஜெயலலிதாவின் மறைவு குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து, ஆணையம் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்ட முன்னாள் முதல்வர் பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பழனிசாமியுடன் நானும் மருத்துவமனையில் இருந்துள்ளேன். நடந்தது எல்லாம் பழனிசாமிக்கு நன்கு தெரியும். மக்கள் பணம் ரூ.3 கோடிக்கும் மேலாக இதுவரை இந்த ஆணையத்துக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் எதை மறைக்கிறது என்பதை கண்டறிய வேண்டும்.

பன்னீர்செல்வமும், பழனிசாமியும் இணைப்பை ஏற்படுத்தி இரட்டை இலையை மீட்டு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பது பன்னீர்செல்வத்தின் வாக்குமூலம் மூலமாக தெளிவாகிறது. பழனிசாமி, ஆணையத்தை அமைக்கும்போது இந்த ஆணையம் அவசியம் என்பதை அரசாணை மூலம் குறிப்பிட்டுள்ளார். அவரைவிசாரித்தால் பல உண்மைகள்வெளிவரும். இவ்வாறு மனுவில்கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x