Published : 25 Mar 2022 09:37 AM
Last Updated : 25 Mar 2022 09:37 AM
சென்னை: கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை தனியார் பள்ளிகள் உறுதிசெய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம் சார்பில் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் வாயிலாக தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் விவரம்:
கல்விக் கட்டணத்தை மாணவர்களிடம் சில பள்ளிகள் பாரபட்சம் காட்டுவதாக புகார்கள் வருகின்றன. அதன்படி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைக்கக் கூடாது என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் இதுசார்ந்துதனியார் பள்ளிகளுக்கு ஏற்கெனவேவழங்கப்பட்டுள்ளன. அதன்தொடர்ச்சியாக கல்விக் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்க பள்ளி நிர்வாகங்கள் முன்வரவேண்டும்.
மேலும், கட்டணம் செலுத்தாதகுழந்தைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை தனியார் பள்ளிகள் உறுதி செய்து சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். அதன்பின்னும் பள்ளிகள் மீது புகார்கள் பெறபட்டால் துறைசார்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT