மரக்காணம் கலவரம் வழக்கில் விடுதலை சிறுத்தைகள் 6 பேரின் ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மரக்காணம் கலவரம் வழக்கில் விடுதலை சிறுத்தைகள் 6 பேரின் ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மரக்காணம் கலவரம் வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 6 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

பாமக சார்பில் மாமல்லபுரத்தில் ‘சித்திரை முழு நிலவு’ நிகழ்ச்சி கடந்த 2013 ஏப்ரல் 25-ம் தேதி நடத்தப் பட்டது. இதில் பங்கேற்க தமிழகத் தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாமக தொண்டர்கள் வந்தனர். அப்போது அவர்களுக்கும் விழுப் புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள சில கிராமங்களை சேர்ந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

இதில் பாமகவினரின் வாகனங் கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த கலவரத்தில் பாமகவை சேர்ந்த செல்வராஜ் என்பவர் இறந்தார். இதுகுறித்து மரக்காணம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.

இந்த வழக்கை திண்டிவனம் அமர்வு நீதிமன்றம் விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மணிகண்டன், ரகு, செந்தில்குமார், பாரிநாதன், ராஜி, சேகர் ஆகிய 6 பேருக்கும் ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து 6 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், எஸ்.நாகமுத்து முன்பு இந்த மனு நேற்று விசா ரணைக்கு வந்தது. மனுவை விசா ரித்த நீதிபதிகள், 6 பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண் டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in