Published : 25 Mar 2022 06:06 AM
Last Updated : 25 Mar 2022 06:06 AM

கோவில்பட்டி | நகைக்கடன் தள்ளுபடி பிரச்சினை - தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தை கிராம மக்கள் முற்றுகை

கோவில்பட்டி அருகே வில்லிசேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.

கோவில்பட்டி: நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் தங்களது பெயர் இல்லாததால் கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

இக்கூட்டுறவு சங்கத்தில் 1,300 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 936 பேர் தங்களது நகைகளை அடமானம் வைத்துள்ளனர். 5 பவுனுக்கு குறைவாக நகை கடன்பெற்றவர்களுக்கு அரசு அறிவித்தபடி கடன் தொகையை தள்ளுபடிவழங்கும் பொருட்டு தகுதியானவர்களின் பட்டியல் வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நேற்று முன்தினம் மாலை ஒட்டப்பட்டது. இதில், 343 பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்ததால் கிராம மக்கள்அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், கடன் தள்ளுபடி பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் நேற்றுகாலை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு கயத்தாறு போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

தகவல் அறிந்து, கோவில்பட்டி வட்டாட்சியர் அமுதா, டி.எஸ்.பி. உதயசூரியன், கூட்டுறவு சங்க மாவட்ட இணைப் பதிவாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட துணைப் பதிவாளர் முருகவேல் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களுக்கு பின்னர் நகை அடமானம் வைத்தவர்களுக்கு கடன் தள்ளுபடி கிடைத்துள்ளாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து பட்டியலை மீண்டும் தணிக்கை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் தள்ளுபடி பட்டியல் ஒட்டப்பட்டது. இதில், 343 பேரின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x