சர்வதேச கண்காட்சியில் கலந்துகொள்ள முதல்வர் இன்று துபாய் பயணம்: முதலீட்டாளர்களையும் சந்திக்கிறார்

சர்வதேச கண்காட்சியில் கலந்துகொள்ள முதல்வர் இன்று துபாய் பயணம்: முதலீட்டாளர்களையும் சந்திக்கிறார்
Updated on
1 min read

சென்னை: துபாயில் 192 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தனி விமானத்தில் துபாய் செல்கிறார்.

தமிழகத்தை தொழில்துறையில் முதலிடத்துக்குக் கொண்டு வரும் முயற்சியில் தமிழக அரசுதீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்குஆதாரமாக முதலீடுகளை அதிகஅளவில் ஈர்க்க, தமிழகத்தின்உட்கட்டமைப்பு வசதிகளைஅதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்கி அதற்கான இணையதள வசதியும் ஏற்படுத் தப்பட்டுள்ளது.

சர்வதேச கண்காட்சி

இந்நிலையில், 192 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கண்காட்சி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் உள்ள அரங்குகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் திறந்து வைத்தார். இதில், தமிழக அரசு சார்பில் கைத்தறி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மற்றும் பெருந்தொழில்கள் பற்றியஅரங்கம் அமைக்கப்பட உள்ளது.இந்த அரங்கத்தின் மூலம் தமிழகத்தில் தொழில் தொடங்கமுதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

இந்தக் கண்காட்சியில் பங்கேற்று முதலீடுகளை ஈர்க்கும்நோக்கில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் துபாய்செல்கிறார். அவருடன், சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் செல்கின்றனர்.

முதல் அயல்நாட்டு பயணம்

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வரான பின் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் அயல்நாட்டு பயணம் இது. துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு, வரும் 27-ம் தேதி முதல்வர் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in