Published : 24 Mar 2022 06:57 AM
Last Updated : 24 Mar 2022 06:57 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே திறந்தவெளி சிறையில் கைதி இறந்ததில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தூர் அருகே வெங்கடேஷ்வரபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (52). இவர் கொலை குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, மதுரை மத்திய சிறையில் இருந்தார். 2018-ம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே புரசடை உடைப்பு திறந்தவெளிச் சிறையில் இருந்தார்.
நேற்று முன்தினம் சிறை அதிகாரிகளை மிரட்ட அங்குள்ள உயர்ழுத்த மின்கம்பத்தில் ஏறியுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக மின்கம்பி உரசியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி இறந்தார். நேற்று அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
ஆனால் குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்து விட்டனர். தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் கருப்பச்சாமி மனைவி இலங்கேஸ்வரி தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், சிறைத்துறையினர் நெருக்கடியால் இறந்திருக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் புகார் கொடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT