Published : 24 Apr 2016 10:00 AM
Last Updated : 24 Apr 2016 10:00 AM

தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைவு

சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்துள்ளதால், சென்னையில் நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.22 ஆயிரத்து 128-க்கு விற்கப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கம் விலை யில் ஏற்படும் மாற்றம், தங்கம் முத லீட்டில் ஏற்படும் மாற்றம், ரூபாய் மதிப்பில் ஏற்படும் மாற்றம் போன்ற காரணங்களால் உள்ளூரில் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது.

இந்நிலையில், சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று கணிசமாக குறைந்திருந்தது. இதனால், சென்னையில் நேற்று 22 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.22 ஆயிரத்து 128-க்கு விற்கப்பட்டது. 22 காரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 766-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 786-க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x