Published : 07 Apr 2016 12:22 PM
Last Updated : 07 Apr 2016 12:22 PM

மதிமுக கோட்டாவில் வீரலட்சுமி, நாகை திருவள்ளுவனுக்கு தலா ஒரு சீட்: வைகோ அறிவிப்பு

மக்கள் நலக் கூட்டணியில் மதிமுக கோட்டாவில் தமிழர் முன்னேற்றப் படை தலைவர் கி.வீரலட்சுமி மற்றும் தமிழ்ப்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவனுக்கு தலா ஒரு சீட் வழங்கப்படும் என்று வைகோ கூறியுள்ளார்.

தமிழர் முன்னேற்றப் படை தலை வர் கி.வீரலட்சுமி, இந்திய தேசிய லீக் தலைவர் தடா ரஹீம், தமிழ்ப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த நாகை திருவள்ளுவன் ஆகியோருடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேமுதிக அலுவலகத்துக்கு நேற்று காலை சென்றார்.

தேமுதிக தலைவர் விஜய காந்துடன் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு பின் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:

தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வராக்க இந்தக் கூட்டணி பாடுபடும். தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி மற்றும் நாகை திருவள்ளுவனுக்கு தலா ஒரு சீட் கொடுக்க முடிவெடுத்துள்ளோம். மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் அவர்கள் போட்டியிடுவார்கள். மக்கள் நலக் கூட்டணியின் தொகுதி பங்கீடு 2 தினங்களில் முடிவாகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, வைகோ வெளியே வருவதற்கு 15 நிமிடம் முன்பாக வந்த அப்துல் ரஹீம், “தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினேன். 19 ஆண்டுகளாக சிறை

யில் வாடும் இஸ்லாமிய சமூகத் தினரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றேன். நான் முதல்வர் ஆனதும் நிச்சயம் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறேன் என்று விஜயகாந்த் கூறினார். நான் சீட் ஏதும் கேட்கவில்லை. அவர்கள் தந்தால் ஏற்பேன்’’ என்றார்.

தமிழர் முன்னேற்றப்படைத் தலைவர் வீரலட்சுமி வன்னியர் சமு தாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருவள்ளூர், குறிஞ்சிப்பாடி, கடலூர், குன்னம், ஜெயங்கொண்டம் ஆகிய 5 தொகுதிகளில் ஏதாவது ஒன்றை வழங்க பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், நாகை திருவள்ளு வனுக்கு திருப்பூர் அல்லது கோவை மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தனித்தொகுதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x