விதி மீறி கோயிலுக்குள் பிரச்சாரம்: பாஜக வேட்பாளர் வானதி மீது வழக்கு

விதி மீறி கோயிலுக்குள் பிரச்சாரம்: பாஜக வேட்பாளர் வானதி மீது வழக்கு
Updated on
1 min read

கோவை தெற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், "ஆலயம் தொழுவோம் வானதியுடன்" என அழைப்பிதழ் அச்சடித்து கோவையில் உள்ள முக்கியமான கோயில்களுக்குள் சென்று கடந்த 10-ம் தேதி வானதி சீனிவாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக படங்களுடன் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக தெற்கு சட்டப்பேரவை தொகுதி பறக்கும்படை அலுவலர் ருக்மணி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார் அரசு உத்தரவை மீறியது (188), தேர்தல் விதிகளை மீறியது (171சி) மற்றும் (171எப்) ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் வானதி சீனிவாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வானதி சீனிவாசன் கூறும்போது, "தேர்தல் விதிகளை ஒருபோதும் மீறவில்லை. கோயிலுக்குள் வெளியே நின்றுதான் நோட்டீஸ் கொடுத்தோம். கோயிலுக்குள் இருந்து நோட்டீஸ் தரவில்லை" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in