Published : 02 Apr 2016 09:38 AM
Last Updated : 02 Apr 2016 09:38 AM

கோடை சீசனால் வரத்து அதிகரிப்பு: மல்லிகை பூ விலை கடும் சரிவு - கிலோ ரூ.80க்கு விற்பனை

வரத்து குறைவால் முகூர்த்த நேரங்களில் கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் மல்லிகைப் பூ, தற்போது வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்து கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண் டுக்கல், நிலக்கோட்டை, சிலுக்கு வார்பட்டி, சித்தர்கள் நத்தம், வத்தல குண்டு உள்ளிட்ட பகுதிகளில் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பில் மல்லிகை சாகுபடி மேற்கொள்ளப் படுகிறது. கோடை காலம் மல் லிகை செடிக்கு ஏற்ற பருவ காலம் என்பதால் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்தபோதும், சந்தையில் தேவை மிகவும் குறை வாகவே காணப்பட்டது.

முக்கிய விசேஷங்கள், முகூர்த்தங்கள் இந்த மாதத்தில் குறைவாக இருந்ததால், பூக்களுக்கு விலை இல்லாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விலை வெகுவாகக் குறைந்து நிலக்கோட்டை பூ மார்க் கெட்டில் நேற்று முன்தினம் கிலோ ரூ.60 வரை விற்பனையானது. நேற்று சற்று உயர்ந்து கிலோ ரூ.80-க்கு விற்றது.

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் காலையில் தொடக்கத்தில் கிலோ 120 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப் பூ நேரம் செல்லச்செல்ல படிப்படியாக விலை குறைந்து கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையானது. நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் விலைபோகாத மல்லிகை பூக் களை சென்ட் தயாரிக்கும் தொழிற் சாலையை சேர்ந்தவர்கள் மொத்த மாக வாங்கிச் சென்றனர்.

திண்டுக்கல் மார்க்கெட்டில் பகல் ஒரு மணி வரையும் பூக்கள் விற்பனை யாகாமல் குவித்து வைக்கப்பட் டிருந்தன. மழைக்காலம், பனிக் காலமான நவம்பர், டிசம்பர், ஜன வரி மாதங்களில் மல்லிகைப் பூ அதிகளவில் பூப்பதில்லை. இதனால் வரத்து குறைவாகவே இருக்கும். அந்த மாதங்களில் முகூர்த்தங்கள், கோயில் விசேஷங் கள் அதிகளவில் நடப்பதால் தேவை அதிகரித்திருக்கும். அந்த நாட்களில் மல்லிகைப் பூ கிலோ அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்பனையானது உண்டு.

இது குறித்து குள்ளிசெட்டிபட்டி யைச் சேர்ந்த பூ விவசாயி பாலச்சந்திரன் கூறியதாவது:

விலை அதிகரிக்க வாய்ப்பில்லை

சில மாதங்களாக, பனியால் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருந் ததால், மல்லிகை விளைச்சல் குறைவாகவே இருந்தது. தற் போது மல்லிகைச் செடிக்கு ஏற்ற காலமாக அதிக வெயில் காரண மாக விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால் விலைதான் கிடைக்க வில்லை. கோடை மழை தொடங் கும் வரை பூக்கள் விளைச்சல் அதிகரிக்கும். விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என்றார்.



மல்லிகைக்கு ஏற்ற கோடை வெயில்

மல்லிகை செடிக்கு அதிக தண்ணீர், பனி ஆகியவை விளைச்சலை குறைக்கும். வெயில், குறைந்த அளவிலான தண்ணீர் இருந்தால், அதிகளவிலான விளைச்சல் இருக்கும். இந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற இடம் நிலக்கோட்டை பகுதி என்பதால்தான், இப்பகுதியில் அதிகளவு பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். குறிப்பாக மல்லிகை பூ, மழை வெயில் என்ன எந்த காலத்திலும் பாதிப்பை தராது வருமானத்தை தரும் என்பதால், அதிகம் பேர் நிலக்கோட்டை வட்டாரப் பகுதியில் மல்லிகை சாகுபடி செய்துவருகின்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x