Published : 23 Mar 2022 06:18 AM
Last Updated : 23 Mar 2022 06:18 AM
விருத்தாசலம்: குடிப்பழக்கத்துக்கு அடிமையானவரை மனைவி கண்டித்ததால், கணவர் தன் மீது தீவைத்துக் கொண்டார். இதில் அவர் உயிரிழந்தார்.
விருத்தாசலத்தை அடுத்த குருவன்குப்பத்தைச் சேர்ந்தவர் ஆனந்தகுமரன் (40). விவசாய கூலித் தொழிலில் ஈடுபட்டவந்த இவருக்கு திருமணமாகி பரமேஸ்வரி (40) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
கிடைக்கும் கூலிப் பணத்தை வீட்டுச் செலவுக்கு தராமல், முழுவதையும் குடிப்பதற்கே செலவிட்டு வந்துள்ளார். இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 18-ம் தேதியன்று வழக்கம் போல் குடித்து விட்டு வந்ததால, வீட்டில் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் ஆனந்தகுமரன் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து, பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஆலடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT