

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா மார்ச் 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் காப்புக்கட்டி 15 நாட்கள் விரதம் இருக்கத் தொடங்கினர்.
திருவிழாவை முன்னிட்டு மயில், சிம்மம், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பால் குடம், அக்கினிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. நத்தம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் திரளானோர் பூக்குழி இறங்கி அம்மனை வழிபட்டனர். இதைத் தொடர்ந்து இளைஞர்கள் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.