

3 மாணவிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து எஸ்விஎஸ் சித்த மருத்துவக் கல்லூரிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக் கில், மத்திய அரசு செயலர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதி்மன்றம் உத்தர விட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சி அருகே பங்காரத்தில் செயல்பட்டு வந்த எஸ்விஎஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் கடந்த ஜனவரி மாதம் 3 மாணவிகள் மர்மமான முறையில் இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு பி்ன்னர் ஜாமீனில் விடப்பட்டனர். சிபிசிஐடி போலீஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.
இந்நிலையில், இக்கல்லூரியின் நிர்வாக இயக்குநரான வாசுகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த ஜனவரி 23-ம் தேதி எங்கள் கல்லூரியில் பயின்ற மாணவிகள் சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகியோர் இறந்தனர். இதையடுத்து எங்கள் கல்லூரிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சீல் வைத்துள்ளார். அதே வளாகத்தில் இயங்கிய ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் மாவட்ட ஆட்சியர் சீல் வைத்துள் ளார். இந்த நடவடிக்கை எடுப்ப தற்கு முன்பு எங்களிடம் அவர் எந்த வொரு விளக்கமும் கோர வில்லை. ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு மத்தியஅரசின் ஆயுஷ் துறை அனுமதியளித்துள்ளது. அப்படி இருக்கும்போது மாவட்ட ஆட்சியர் இந்த முடிவை தன்னிச்சையாக எடுத்துள்ளார்.
இந்நிலையில் மத்திய ஹோமி யோபதி கவுன்சில் செயலாளர் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி கவுன் சில் விதிமுறைப்படி கல்லூரியை ஆய்வு செய்ய கடிதம் எழுதியிருந் தார். அவர்கள் கேட்கும் விளக்கங் களை தகுந்த ஆவணங்களுடன் மார்ச் 15-ம் தேதிக்குள் சமர்ப்பித் திருக்க வேண்டும். ஆனால் கல்லூ ரிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதால் இதுவரை எந்த பதிலும் அனுப்ப முடியவில்லை.
மாணவிகள் மரணமடைந்த வழக்கில் நீதிமன்ற காவலில் சிறை யில் இருந்த நான் கடந்த மாதம் 24-ம் தேதிதான் ஜாமீனில் வெளியே வந்தேன். எனவே எங்களது கல்லூ ரிக்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றவும், ஹோமியோபதி மருத் துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கவும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண் டும் இவ்வாறு அதில் கூறப்பட்டி ருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா, இதுகுறித்து பதில ளிக்கும்படி மத்திய அரசின் ஆயுஷ் செயலர், மத்திய ஹோமியோபதி கல்வி கவுன்சில் செயலர், விழுப் புரம் மாவட்ட ஆட்சியர் ஆகி யோருக்கு உத்தரவிட்டார்.