Published : 24 Apr 2016 10:39 AM
Last Updated : 24 Apr 2016 10:39 AM

போட்டி இல்லை.. பிரச்சாரம் மட்டுமே: அதிமுகவில் சேர்ந்த எஸ்.ஆர்.பி. உறுதி

தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. அதிமுகவுக்காக பிரச் சாரத்தில் மட்டுமே ஈடுபடப் போகிறேன் என்று தெரி வித்துள்ளார் தமாகாவில் இருந்து விலகி அதிமுக வுக்கு சென்ற எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்.

‘தி இந்து’வுக்கு தொலை பேசியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

ஏன் இந்த முடிவு?

ஒருமித்த கருத்துடன் வாசன் தலைமையில் அணி சேர்ந்தோம். அவர்கள் மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து விஜய காந்தை முதல்வராக அறிவிப்பதை ஏற்க முடியவில்லை.

முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப் படுபவர் நிதானம் இழந்து பேசுகிறார். நாக்கை மடித்துக்கொண்டு எதற்கெடுத் தாலும் அடிக்கப்பாய்பவர், எப்படி நாட்டையும் மக்களையும் காப்பாற்ற முடியும்? அந்தக் கூட்டணி தலைவர்களே நிதானம் இழந்துதான் பேசுகிறார்கள்.

கருணாநிதி மீது பல்வேறு விமர்சனங்கள் வைத்தவன், வைத்துக் கொண்டிருப்பவன் நான். அதற்காக வைகோ போல, நிதானம் இழந்த விமர்சனங்களை, தரம் தாழ்ந்த விமர்சனங்களை ஒருபோதும் உதிர்த்த தில்லை, உதிர்க்கவும் மாட்டேன்.

அதிமுகவில் தொகுதி கேட்டு போட்டியிடும் எண்ணம் உண்டா?

நிச்சயமாக இல்லை. அதிமுகவுக்காக பிரச்சாரம் மட்டும் செய்வேன்.

காங்கிரஸை, வாசனை புறக் கணிக்கும் நீங்கள் எப்படி ஜெய லலிதாவை மட்டும் ஏற்றுக்கொள்ள முடிகிறது?

10 ஆயிரம் மெகாவாட் மின்சாரத் தேவையையே திமுக அரசாங்கத்தால் பூர்த்திசெய்ய முடியவில்லை. தினந் தோறும் 10 மணி நேர மின்வெட்டில் ஆழ்ந்தது. அதை துடைத்தெறிந்து கடந்த 5 ஆண்டுகளில் மின்வெட்டே இல்லாத மாநிலமாக மாற்றியிருக்கிறார் ஜெய லலிதா.

நேற்று முன்தினம் தமிழக மின் தேவை 12 ஆயிரம் மெகாவாட். அதை முழு மையாகத் தந்துள்ளது அதிமுக ஆட்சி. ஏழை விவசாயிகள், உழைப்பாளிகள், கிராமத்துப் பெண்களுக்கு என்ன தேவையோ அதை முழுமையாகச் செய்துகொடுப்பதில் இந்த அரசு முன்னேறிக்கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x