

திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர் மல்லை சத்யா, மாமல்லபுரத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் நட வடிக்கை எடுப்பதாக வாக் குறுதி அளித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக மாநில துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அம்பேத்கர் சிலைக்கு மாலை
இள்ளலூர் கூட்டுச் சாலை யில் இருந்து கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக சென்ற அவர், வட்டாட்சியர் அலுவலகம் அருகே அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தராசுவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சங்கர், தமாகா மாவட்ட தலைவர் இளங்கோவன், மதிமுக மாவட்ட செயலாளர் பார்த்திபன், மதிமுக நகர செயலாளர் லோகு உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர், ‘திருப் போரூர் பகுதியில் பன்னாட்டு தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்பூங்காக்கள் உள்ளன. இங்கு, உள்ளூர் இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாமல்லபுரத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கான கட்டமைப் புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
குதிரையில் வாக்கு சேகரிப்பு
மல்லை சத்யா வேட்புமனு தாக்கல் செய்வதற்காக முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தபோது, அவருக்கு ஆதர வாக மதிமுக தொண்டர் குதிரையில் அமர்ந்து பம்பரம் சின்னத்தை கையில் ஏந்தி சென்று வாக்கு சேகரித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.