

ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தங்கள்குழந்தைகளுடன் வந்த குடியிருப் புவாசிகள் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு மனு அளித்தனர்.
கடலூர் ஆட்சியர் அலுவலகத் தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், பண் ருட்டி நகராட்சி களத்துமேடு புதுநகரைச் சேர்ந்த மக்கள் தங்களதுபள்ளிச் செல்லும் குழந்தைகளு டன் வந்திருந்து மனு ஒன்றைஅளித்தனர். அதில், அப்பகுதியில் உள்ள சுமார் 200 வீடுகளுக்கு நகராட்சி சார்பில் அனுப்பிய பதிவுதபாலில், சின்ன ஏரியை ஆக்கிர மித்து வீடு கட்டியிருப்பதாகவும், அதனால் எதிர்வரும் 28-ம் தேதிக்குள் குடியிருப்புகளை காலி செய்யவேண்டும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
இப்பகுதியில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் குடியிருந்து வரும் நிலையில், நகராட்சி சார்பில் சிமென்ட் சாலை, வீடுகளுக்கு மின் இணைப்பு, தெருவிளக்கு,குடிநீர் வசதி ஆகிய அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. நகராட்சி நோட்டீஸ் அனுப்பிய பின்னர் தான் அது ஏரி என்பதே எங்களுக்கு தெரியவந்துள்ளது.
தற்போது அந்த ஏரிக்கான வரத்து வாய்க்காலோ அல்லது பாசன வாய்க்காலே இல்லை. இந்த ஏரியை நம்பி விளை நிலங்களும் இல்லை. இப்பகுதியில் வசித்து வரும் ஆண்கள், பெண்கள் அனை வரும் கூலி வேலையை செய்து வருகின்றனர். குழந்தைகள் நகராட்சிப் பள்ளியில் படித்து வரு கின்றனர்.
இந்நிலையில் வீடுகளை உடனடியாக காலி செய்ய வலியுறுத் தியிருப்பதை ஏற்க முடியாது. இதனால் எங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதோடு, வாழ் வாதாரமே முற்றிலுமாக அழிந்து விடும்.
இடிக்கப்படும் வீடுகளுக்குப் பதிலாக 20 கி.மீ தூரத்தில் மாற்று இடம் தருவதாக கூறப்படுகிறது. இங்கு வீடுகளை இடித்து விட்டுஅங்குச் சென்று எப்படி வீடுகட்ட முடியும். எனவே நகரத்திற் குள்ளேயே மாற்று இடம் ஏற் பாடு செய்வதோடு, வீடுகளை அகற் றுவதற்கும் போதிய அவகாசம் அளிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.