

தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் அடிப்பதால் 50 வயதுக்கு மேல் உள்ள போலீஸாரை போக்கு வரத்துப் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை, சேலம், தருமபுரி, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங் களில் வெயில் 100 டிகிரி ஃபாரன் ஹீட்டை தாண்டியுள்ளது. பகல் நேரத்தில் அனல் காற்றும் வீசி வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்த தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை குடிப்பது, பழங் களைச் சாப்பிடுவது, ஏசி அறை யில் இருப்பது என பல்வேறு தற் காப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ஆனால் பொதுமக்களை காக் கும் பணியில் ஈடுபட்டுள்ள போக்கு வரத்து போலீஸார் எவ்விதமான பாதுகாப்பு வசதியும் இல்லாமல் கொளுத்தும் வெயிலில் சாலையில் போக்குவரத்தை சரிப்படுத்தும் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதி களை செய்து தருவதில்லை.
இதுபற்றி திருவான்மியூரில் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸாரிடம் கேட்டபோது, “வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருக்க பெட்ஹெட் எனப்படும் காகிதத்தால் செய்யப்பட்ட தொப்பியைக் கொடுத்துள்ளனர். வெயில் படாமல் இருக்க சிறிய அளவிலான நிழல் குடை உள்ளது. தினமும் 4 மோர் பாக்கெட்டுகளை தருகிறார்கள். இதைத்தவிர வேறு எந்த வசதியும் இல்லை. வெயில் கடுமையாக இருக்கிறது. சமாளிக்க முடியவில்லை. வெயிலுக்கு ஒதுங்கி நிழலில் சிறிது நேரம் நின்றால் சாலை யில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது. என்ன செய் வது?” என்றார்.
கிண்டியில் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் இதுபற்றி கூறும்போது, “தினமும் 4 மணி நேரம் வேலை, 4 மணி நேரம் ஓய்வு, மீண்டும் 4 மணி நேரம் வேலை என 8 மணி நேரம் வேலை பார்க்கிறோம். உச்சி வெயிலில் சாலையில் நிற்கும் போக்குவரத்து போலீஸாருக்கு பெரிய அளவிலான நிழல் குடையை அமைத்துக் கொடுத் தால் நன்றாக இருக்கும். பணியின் போது தண்ணீர் குடிக்க வேண் டும் என்றால், அருகில் உள்ள கடைகளுக்கு செல்ல வேண்டியுள் ளது. தண்ணீர் கேன்களை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
வேளச்சேரியில் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸா ரிடம் கேட்டபோது, “வெயில் காரண மாக தலைவலி, தலைச் சுற்றல், மயக்கம் ஏற்படுகிறது. வெயிலைத் தாங்க முடியாமல் சில போலீஸார் கீழே உட்கார்ந்து விடுகின்றனர். 4 மணி நேரம் வேலை, 4 மணி நேரம் ஓய்வு என்பதை 2 மணி நேரமாக குறைக்க வேண்டும். மோர் பாக் கெட்டுகளை கொடுக்கிறார்கள். அதற்கு பதில் மோர் பாக்கெட் டுகளுக்கான பணத்தை கொடுத் தால், நாங்களே விருப்பப்பட்ட பழங்களை வாங்கிச் சாப்பிடு வோம்” என்றார்.
பரங்கிமலையில் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸாரி டம் கேட்டபோது, “வெயிலில் பாதுகாப்பாக இருக்க தலைக்கு தொப்பி கொடுப்பதைப் போல், கூலிங் கிளாஸ் கொடுத்தால் நன் றாக இருக்கும். தண்ணீர் கேன் களை வைக்க வேண்டும்” என்றார்.
இதுதொடர்பாக சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரகுநந் தன், பொது மருத்துவத்துறை மூத்த உதவி பேராசிரியர் டாக்டர் சிவராம் கண்ணன் உள்ளிட்ட டாக்டர்கள் கூறியதாவது:
வெயிலில் சாலையில் நிற்கும் போக்குவரத்து போலீஸாருக்கு வியர்வை அதிகமாக வெளியே றும். இதனால் உடலில் நீர்சத்து குறைந்துவிடும். நீர்ச்சத்து குறை வதால் மூளை, சிறுநீரகம், இதயம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்படலாம். அதிகப்படியான வெப்பத்தால் கண்களும் பாதிக் கப்படும். வெயில் தாங்க முடியா மல் மயங்கி விழுந்தால், அவரை உடனடியாக அருகில் உள்ள மருத் துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். காலதாமதம் ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
வெயிலில் நிற்கும் போலீஸார் நாக்கு வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 முதல் 5 லிட்டர் தண்ணீரை கண்டிப்பாக குடிக்க வேண்டும். காரம் மற்றும் எண்ணெய் உணவு களைச் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை சைவ உணவுகளை சாப்பிட வேண்டும். உணவில் முள்ளங்கி உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகளை அதிகமாக குடிக்க வேண்டும். 50 வயதுக்கு மேல் உள்ள போலீ ஸாரை வெயிலில் சாலையில் நின்று போக்குவரத்து பணியில் ஈடு படுத்துவதை தவிர்க்க வேண்டும். அவர்களால் வெயிலை தாங்கிக் கொள்ள முடியாது என்றனர்.